தேசிய செய்திகள்

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து + "||" + Kashmir Restrictions reimposed in parts of Srinagar after incidents of violence

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து
ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந்தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தது. காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் செல்போன் தொடர்பு  சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது - இந்தியா அறிவிப்பு
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தாது என இந்தியா அறிவித்துள்ளது.
2. காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு
காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலையாக உள்ளனர்.
3. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அப்ரிடி பாராட்டு
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
5. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.