முத்தலாக்முறை ஒழிப்பு விவகாரம்: காங்கிரசுக்கு வெட்கமே இல்லை - அமித்ஷா தாக்கு


முத்தலாக்முறை ஒழிப்பு விவகாரம்: காங்கிரசுக்கு வெட்கமே இல்லை - அமித்ஷா தாக்கு
x
தினத்தந்தி 18 Aug 2019 5:28 PM GMT (Updated: 18 Aug 2019 5:28 PM GMT)

முத்தலாக்முறை ஒழிப்பு விவகாரத்தில், காங்கிரசுக்கு வெட்கமே இல்லை என அமித்ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில், முத்தலாக் முறை ஒழிப்பு தொடர்பாக, சியாம பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். அபோது பேசிய அவர், “முத்தலாக் நடைமுறை ஒரு முறைகேடான செயல் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் கிடையாது. நாடாளுமன்றத்தில் சில கட்சிகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால், முறைகேடான இந்த நடைமுறை முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்களது ஆழ்மனதுக்கு தெரியும். ஆனால் அதற்கு தடை செய்வதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை. ஆனால், பிரதமர் மோடி இந்த தவறுக்கு முடிவு கட்டினார். அதனால், நாட்டின் சீர்திருத்தவாதிகள் பட்டியலில் மோடியின் பெயரும் இடம்பெறும் என்று நம்புகிறேன்.

முத்தலாக் தடை மசோதா, முஸ்லிம்களின் நலனுக்கானது மட்டுமே தவிர வேறு எதற்காகவும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் சமணர்கள் என யாரும் முத்தலாக் தடை மசோதாவால் பலன் அனுபவிக்கப்போவதும் இல்லை, பாதிக்கப்படப்போவதும் இல்லை.

நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்ட காங்கிரசுக்கு இப்போதும் வெட்கம் இல்லை. தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அவர்களிடம் காரணமே இல்லை. இருந்தாலும், ஓட்டு வங்கி சிதையாமல் இருப்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இத்தகைய ஓட்டு வங்கி அரசியல் நாட்டை பெரிதும் பாதித்துள்ளது” என்று தெரிவித்தார்.


Next Story