அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - செங்கோட்டையன் பேட்டி


அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 19 Aug 2019 9:59 PM GMT (Updated: 19 Aug 2019 9:59 PM GMT)

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் டெல்லியில் நேற்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், ‘தேசிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார். அதையே மத்திய அரசுக்கு அவர் பரிந்துரைக்க இருக்கிறார்.

புதிதாக கொண்டுவரப்படும் ‘கல்வி தொலைக்காட்சி’ மூலம் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம், கலை பண்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழகத்தின் கலை பண்பாடுகள், கலாசாரத்தை எடுத்துரைக்கவும் மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே வாய்ப்பு உருவாகும். அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து அரசுக்கு கடிதம் வருமானால், அல்லது கவனத்துக்கு வருமானால் மாசிலாமணி தலைமையிலான ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story