ராஜீவ்காந்தி நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைப்பு


ராஜீவ்காந்தி நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:08 PM GMT (Updated: 2019-08-20T03:38:03+05:30)

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவு ஜோதியை கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு ஆண்டு தோறும் எடுத்து செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் ராஜீவ்காந்தியின் நினைவுஜோதி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நினைவு ஜோதி நேற்று ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் கர்நாடக மாநில காங்கிரசார் கலந்து கொண்டனர்.

Next Story