ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி


ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது; பிரியங்கா காந்தி
x
தினத்தந்தி 3 Sep 2019 8:09 AM GMT (Updated: 3 Sep 2019 8:09 AM GMT)

உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, இந்திய பொருளாதார நிலை குறித்து பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பலதரப்புகளில் பாரதீய ஜனதா அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதையடுத்து உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வாதேரா, இந்திய பொருளாதார நிலை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரியங்கா காந்தி வாதேரா கூறியிருப்பதாவது:-

“ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது, எனவே பாரதீய ஜனதா அரசு தனது ஆட்சியில் இந்தியாவில் வரலாறு காணாத மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்று கொள்ளவேண்டும். மேலும், பொருளாதார இழப்பை சரி செய்ய திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பொருளாதார மந்தநிலையை அனைவரும் தங்கள் கண் முன்னே காணும் போது, பாரதீய ஜனதாவால் எவ்வளவு காலத்திற்கு தலைப்பு செய்திகளை பயன்படுத்தி தப்பிக்க இயலும் ? ” என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Next Story