பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. இதற்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த மாதம் 6-ந்தேதி ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான சவுராவில் ஏராளமானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் அஸ்ரார் அகமது கான் என்ற 18 வயது வாலிபர் காயமடைந்தார். அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் ஸ்ரீநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பெரும்பாலான இடங்களில் நேற்று மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

Related Tags :
Next Story