தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் - ஏவுதளங்கள் -இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை + "||" + Pakistan Army, ISI planning major infiltration of terrorists in Jammu and Kashmir, warn intelligence agencies

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் - ஏவுதளங்கள் -இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் - ஏவுதளங்கள் -இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை
பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்தது, அம்மாநிலத்தை  2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு.

இந்தியாவின் இந்த  முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பிரச்சினையைத் தூண்டுவதற்கான பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரில் ஐஎஸ்ஐ  பயங்கரவாதிகளை பெருமளவில் ஊடுருவ வைக்க திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய புலனாய்வு அமைப்புகளின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, அதிக பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை நாட்டிற்குள் தள்ளுவதற்காக பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்று புதிய பயங்கரவாத முகாம்களை அமைத்துள்ளன. 

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் 18 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது. அங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று, ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். 

ஏஜென்சிகள் பயங்கரவாத முகாம்களையும், கட்டுப்பாட்டுப் பாதையில் ஏவுதளங்களையும் அடையாளம் கண்டுள்ளது. மன்ஷெரா, கோட்லி மற்றும் ஏ-3 ஆகிய மூன்று பிரிவுகளில் முக்கிய பயங்கரவாத முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்ஷெராவின் கீழ், பாலகோட், காரி, ஹபிபுல்லா, பத்ராசி, செரோ மண்டி, சிவாய் நாலா, முஸ்கரா மற்றும் அப்துல்லா பின் மசூத் ஆகிய இடங்களில் ஏவுதளங்கள் உள்ளன.

கோட்லி பகுதியில், குல்பூர், சேசா, பாராலி, துங்கி மற்றும் கோட்லி ஆகிய இடங்களில் பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஏ-3 செக்டார், காளி காதி மற்றும் ஹசீரில் பயங்கரவாத முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, பஹவல்பூர், பும்பா மற்றும் பர்னாலாவில் புதிய முகாம்கள் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு: இந்திய ராணுவம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடித்தது.
2. ஜெனீவாவின் மனித உரிமை அலுலகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்
ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமை அலுவலகத்திற்கு வெளியே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் ராணுவம் என்று போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
3. இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் : இந்தியா விமர்சனம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் - பாஜக தலைவர் ராம் மாதவ்
ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
5. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.