பிரதமர் அலுவலக கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் - நிதின் கட்காரி தகவல்


பிரதமர் அலுவலக கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் - நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 10 Sept 2019 12:48 AM IST (Updated: 10 Sept 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் அலுவலக கடிதத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக நிதின் கட்காரி தகவல் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் சாலை திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பி இருந்தது. இதை அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரியிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும் போது, அந்த அதிகாரி பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த கடிதம் காரணமாக பல்வேறு போலி செய்திகளும் வெளியாகி இருந்ததாக அவர் கூறினார்.

Next Story