சத்தீஸ்காரில் பஸ்சுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்


சத்தீஸ்காரில் பஸ்சுக்கு தீ வைத்த நக்சலைட்டுகள்
x
தினத்தந்தி 16 Sept 2019 12:15 AM IST (Updated: 15 Sept 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகள் பஸ் ஒன்றுக்கு தீ வைத்தனர்.

பைஜாபூர்,

சத்தீஸ்கார் மாநிலம் பைஜாபூர் மாவட்டம் உசூரில் இருந்து பைஜாபூர் நோக்கி சென்ற பஸ்சை வழிமறித்த நக்சலைட்டுகள், அதில் இருந்த பயணிகளை இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் பஸ்சுக்கு தீ வைத்தனர்.

தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பின்னர் நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர்.

நக்சலைட்டுகள் தீ வைத்ததில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது. பயணிகள் இறக்கி விடப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Next Story