தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக பாதிப்பு: ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது + "||" + The 42nd day of normal life in Kashmir impacted: Only weekend market in Srinagar

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக பாதிப்பு: ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக பாதிப்பு: ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 42-வது நாளாக முடங்கியது. ஸ்ரீநகரில் வாரச்சந்தை மட்டும் இயங்கியது.
ஸ்ரீநகர்,

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் எளிய தாக்குதல் இலக்காக விளங்கிய காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி அதிரடியாக ரத்து செய்தது.


அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதைத் தொடர்ந்து காஷ்மீரில் விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்கிற வகையில் வதந்தி பரப்புகிற இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. செல்போன் சேவை, தரைவழி தொலைபேசிச்சேவை நிறுத்தப்பட்டது. பதற்றமான இடங்களில் ஊரடங்கு அமலானது.

இதன் காரணமாக காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நேற்று 42-வது நாளாக முடங்கியது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் தனியார் வாகனங்கள் தடையின்றி ஓடின.

ஸ்ரீநகரில் வாரச்சந்தை இயங்கியது. பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்கிச்செல்வதற்காக சந்தையில் திரளான எண்ணிக்கையில் கூடினர். அங்கு கடைகளை மூடச்சொல்லி விஷமிகள் வற்புறுத்துவதை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.

பள்ளத்தாக்கு பகுதியில் தரைவழி தொலைபேசிச்சேவை இயங்கியது. ஆனால் இணையதளச்சேவை முடக்கம் தொடர்கிறது. குப்வாரா, ஹந்த்வாரா போலீஸ் மாவட்டங்களில் செல்போன் பேச்சு சேவை மட்டும் உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும்கூட, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபாப முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் கல்வி ஆர்வலர் மலாலா, காஷ்மீரில் அமைதி நிலவவும், குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பவும் ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
2. காஷ்மீர்: சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
காஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3. காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்
72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
4. 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது
சுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.
5. 70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில் இன்று முதல் செல்போன் சேவை
காஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.