நிதின் கட்காரியுடன் நடிகர் சஞ்சய் தத் திடீர் சந்திப்பு


நிதின் கட்காரியுடன் நடிகர் சஞ்சய் தத் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 17 Sept 2019 1:30 AM IST (Updated: 17 Sept 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

நிதின் கட்காரியை நடிகர் சஞ்சய் தத் திடீரென சந்தித்து பேசினார்.

மும்பை,

இந்தி நடிகர் சஞ்சய் தத் ராஷ்டிரீய சமாஜ் கட்சியில் இணைய உள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. மேலும் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என ராஷ்டிரீய சமாஜ் கட்சியை சேர்ந்த மாநில மந்திரி மகாதேவ் ஜான்கர் கூறினார். இந்தநிலையில், நேற்று முன்தினம் நாக்பூரில் நடிகர் சஞ்சய் தத் மத்திய மந்திரி நிதின் கட்காரியை அவரது வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என நடிகர் சஞ்சய் தத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story