பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்


பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் - சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2019 12:00 AM IST (Updated: 4 Oct 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை (6.9 சதவீதம்) விட குறைவாக, அதாவது 6.1 சதவீதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பொருளாதாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘உள்நாட்டு உற்பத்தி விகித மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்து உள்ளது. ஆனால் இந்த உண்மை நிலையை மறைக்க மத்திய அரசு நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. ஆனால் இனியும் இதை மறைக்க முடியாது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இவ்வாறு அழிவுறுவதை அனுமதிக்க முடியாது’ என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

Next Story