கோவாவில் மேலும் பலர் கட்சி தாவ வாய்ப்பு; முதல்-மந்திரி சூசக தகவல்


கோவாவில் மேலும் பலர் கட்சி தாவ வாய்ப்பு; முதல்-மந்திரி சூசக தகவல்
x
தினத்தந்தி 7 Oct 2019 1:50 AM IST (Updated: 7 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

கோவாவில் மேலும் பலர் கட்சி தாவ வாய்ப்புள்ளதாக முதல்-மந்திரி பிரமோத் சவந்த் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பனாஜி,

கோவா மாநிலத்தில் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலம் 5 ஆக குறைந்தது. அவர்களில் ஒருவரான அலெய்சோ ரெஜினால்டோ லாரங்கோவின் 50-வது பிறந்தநாள் விழா, பனாஜியில் நடைபெற்றது. அதில், முதல்-மந்திரி பிரமோத் சவந்த் பங்கேற்றார்.

விழாவில், கோவா துறைமுக மந்திரி மைக்கேல் லோபோ பேசுகையில், “லாரங்கோ வெகுவிரைவில் துணை முதல்-மந்திரி ஆவார்” என்று கூறினார். இதுபற்றி முதல்-மந்திரியிடம் நிருபர்கள் கேட்டபோது, “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று அவர் கூறினார். இதன்மூலம், மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்கள் கட்சி தாவ இருப்பதாக அவர் சூசகமாக தெரிவித்தார்.

Next Story