மத்திய பிரதேசத்தில் வி‌‌ஷ்வ இந்து பரி‌‌ஷத் நிர்வாகி சுட்டுக்கொலை


மத்திய பிரதேசத்தில் வி‌‌ஷ்வ இந்து பரி‌‌ஷத் நிர்வாகி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2019 1:30 AM IST (Updated: 10 Oct 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் வி‌‌ஷ்வ இந்து பரி‌‌ஷத் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மண்ட்சார்,

மத்திய பிரதேசத்தின் மண்ட்சார் மாவட்டத்தை சேர்ந்தவர் யுவராஜ் சிங் சவுகான் (வயது 37). வி‌‌ஷ்வ இந்து பரி‌‌ஷத் அமைப்பின் மாவட்ட இணை செயலாளரான இவர் நேற்று காலையில் மண்ட்சார் நகரில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், அவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதில் யுவராஜ் சிங் சவுகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மண்ட்சாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வியாபார போட்டியில் இந்த கொலை நடந்ததாக தெரிகிறது. யுவராஜ் சிங் சவுகான் அப்பகுதியில் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த பணிகளில் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Next Story