ஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலி


ஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 10 Oct 2019 3:06 AM IST (Updated: 10 Oct 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் மின்னல் தாக்கி 150 ஆடுகள் பலியாகின.

குண்டூர்,

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வேடுள்ளபள்ளே கிராமத்தில் வசிப்பவர்கள் வீரையா மற்றும் சேசய்யா. இவர்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவர்களுக்கு சொந்தமான 150 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் எனவும், அரசாங்கம் தங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story