சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்


சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கும் அனுமதி - ராஜ்நாத் சிங் ஒப்புதல்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:39 PM IST (Updated: 18 Oct 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ கல்விக்கான சைனிக் பள்ளிகளில் இனி பெண் குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்க பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பல்வேறு நகரங்களில், ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் வகையில் சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் தற்போது, ஆண் குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் சேர்க்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு ஆண்டுக்கு முன் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளிகளில் பரிசோதனை முயற்சியாக மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் சைனிக் பள்ளிகளில் மாணவிகளை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் 2021-2022ம் கல்வி ஆண்டில் சைனிக் பள்ளிகளில் மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story