காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்


காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்
x
தினத்தந்தி 22 Oct 2019 9:15 PM GMT (Updated: 22 Oct 2019 8:54 PM GMT)

காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்த சம்பளம் வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம், வருகிற 31-ந் தேதியில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்றும், லடாக் யூனியன் பிரதேசம் என்றும் பிரிக்கப்படுகிறது. இதையொட்டி, 31-ந் தேதியில் இருந்து, இரு யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை செய்த சம்பளமும், இதர படிகளும் வழங்கப்படும்.

இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இதனால், 4 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள். இதர படிகளுக்கு மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி செலவாகும் என்று தெரிகிறது.


Next Story