உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்–மந்திரி ஹரிஷ் ரவத் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு, அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.
அப்போது, பா.ஜனதாவுக்கு தாவிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக, ஹரிஷ் ரவத் பண பேரம் பேசுவது போன்ற வீடியோ வெளியானது.
இந்த குதிரை பேரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதையடுத்து, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story