1,154 பயணிகளுடன் சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூரு வருகை


1,154 பயணிகளுடன் சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூரு வருகை
x
தினத்தந்தி 5 Nov 2019 8:21 PM GMT (Updated: 5 Nov 2019 8:21 PM GMT)

1,154 பயணிகளுடன் சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று மங்களூருக்கு வருகை தந்துள்ளது.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே மங்களூரு புதிய துறைமுகம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் துபாயில் இருந்து ‘ஏ.ஐ.டி. அவிதா’ எனும் சுற்றுலா சொகுசு கப்பல் ஒன்று கோவா கடல் வழியாக மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,154 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். 407 ஊழியர்களும் உள்ளனர்.

அவர்களுக்கு கர்நாடக பாரம்பரிய உடை அணிந்து கலைஞர்கள் புடைசூழ துறைமுக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கப்பலில் வந்துள்ள பயணிகள் அங்கு இருந்து முதல் முறையாக ‘ஹெலி-டூரிசம்’ எனும் ஹெலிகாப்டர் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதேபோல் வருகிற 12-ந்தேதி மற்றொரு சுற்றுலா சொகுசு கப்பல் மங்களூருவுக்கு வர உள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story