காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு


காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு: போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2019 12:02 AM IST (Updated: 7 Nov 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கடுமையான பனிபொழிவு காரணமாக ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஸ்ரீநகர்,

 யூனியன் பிரதேசமான லடாக்கை, காஷ்மீருடன் இணைக்கும் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  மேலும் அதிகப்பனிப்பொழிவால் பூஞ்ச் மற்றும் ரஜோரி சாலையை ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான முகலாய சாலையிலும் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.

முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவுடன், மழைக்கும் வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story