சத்தீஷ்காரில் நக்சல்களுடன் மோதல்; சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
சத்தீஷ்காரில் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பிஜாப்பூர்,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் பல்வேறு பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த வருடம் இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு பதிவை புறக்கணிக்கும்படி கூறி, போஸ்டர்களை ஒட்டியும், பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்தும் பரபரப்பினை ஏற்படுத்தினர்.
எனினும், தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் நகரில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சி.ஆர்.பி.எப்.) தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்பட்ட சண்டையில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
Related Tags :
Next Story