ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு


ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 5:35 AM GMT (Updated: 2019-11-09T11:05:55+05:30)

ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பண்டி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.  அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வழங்க இருப்பதையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், ராஜஸ்தானின் பண்டி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று ராஜஸ்தானில் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story