மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க சோனியா காந்தி மறுப்பு
மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார்.
புதுடெல்லி,
மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில், புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்து வந்தாலும், காங்கிரஸ் பிடி கொடுக்க மறுப்பதால், மராட்டிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்த பரபரப்புக்கு மத்தியில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசப்பட்டதாக கூறப்பட்டாலும் மோடி-சரத்பவார் சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம், செய்தியாளர்கள், மராட்டிய அரசியல் நிலவரம் பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால், இக்கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த சோனியா காந்தி, கருத்து சொல்ல விரும்பவில்லை’ எனக்கூறிவிட்டு சென்று விட்டார்.
இதற்கிடையே, மராட்டியத்தில் அடுத்த மாதம் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்றும், அடுத்த இருநாட்களில் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story