துப்பாக்கியுடன் ‘டிக்-டாக்’ வீடியோ; 3 பேர் கைது
துப்பாக்கி சுடுவது போல் ‘டிக்-டாக்’ வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் உள்ள மால்கர்கார்க் ரெயில் நிலைய சாலையில் 2 வாலிபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுடுவது போல் வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’கில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அந்த வீடியோவில் உள்ள கனா (வயது 23) மற்றும் ராகுல் தன்கர் (18) என்ற 2 வாலிபர்களை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு, நாட்டு துப்பாக்கியை ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பிரோஜ் (25) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story