மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி வாழ்த்து


மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி  வாழ்த்து
x
தினத்தந்தி 28 Nov 2019 2:30 PM GMT (Updated: 28 Nov 2019 2:30 PM GMT)

மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு மராட்டிய அரசியல் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தது.  இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மராட்டிய மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர் விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்றும் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Next Story