நிலத்தகராறில் கொலை: 8 பெண்கள் உள்பட 23 பேருக்கு ஆயுள் தண்டனை
ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹன்ஸ்டிகா பகுதியை சேர்ந்த திலிப் கன்வர் என்பவரின் குடும்பத்துக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
தும்கா,
கடந்த 2010-ம் ஆண்டு திலிப் கன்வரின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியது. இதில் சத்யநாராயண் கன்வர் என்பவர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக தும்கா மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. 9 ஆண்டுகளாக விசாரிக் கப்பட்டு வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் இந்த கொலை தொடர்பாக 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தேபசிஷ் மகாபத்ரா தீர்ப்பு வழங்கினார். மேலும் தலா ரூ.1,000 அபராதமும் விதித்தார். தண்டனை பெற்றவர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story