மத்தியபிரதேசத்தில் பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி


மத்தியபிரதேசத்தில் பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்திய பெண் மந்திரி
x
தினத்தந்தி 5 Dec 2019 1:54 AM IST (Updated: 5 Dec 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் பாடலுக்கு ஏற்ப நடனமாடி பெண் மந்திரி ஒருவர் அசத்தினார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மந்திரியாக இருப்பவர் இமார்தி தேவி. மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், உற்சாக மிகுதியில் அங்கு ஒலிபரப்பப்பட்ட பிரபல இந்தி பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார். இதனை பார்த்த சிலர் மந்திரியின் நடனத்தை பாராட்டும் வகையில் பணத்தை அள்ளி வீசினர்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story