தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் + "||" + Union Home Minister Amit Shah tables #CitizenshipAmendmentBill in Lok Sabha

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல்  செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

மசோதாவின் அம்சம் என்ன?

மசோதாவின்படி, கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், அவர்கள் பிராந்தியத்துக்கு இந்த மசோதா பொருந்தாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏனென்றால், அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பகுதிகள், அரசியல் சட்டத்தின் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும், அருணாசலபிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் கிழக்கு வங்காள எல்லைப்புற ஒழுங்குமுறை ஒப்பந்தத்துக்கு உட்பட்டதாலும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி குடியுரிமை அளிக்கப்படும் அகதிகளுக்கு, அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து சட்ட பாதுகாப்பு அளிக்கப்படும். அவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 1985-ம் ஆண்டு போடப்பட்ட அசாம் ஒப்பந்தத்துக்கு முரணாக இருப்பதாக, அசாம் மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) 11 மணி நேர முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா
ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2. கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை
காங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
3. 10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது.
4. ராகுல் காந்தியை கடுமையாக சாடும் ராணுவ வீரரின் தந்தை - டுவிட்டரில் பகிர்ந்த அமித்ஷா
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
5. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் - அமித்ஷா
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.