‘குடியுரிமை திருத்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ ப.சிதம்பரம் கருத்து


‘குடியுரிமை திருத்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 10 Dec 2019 9:51 PM IST (Updated: 10 Dec 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நாளை (11-ம் தேதி)  தாக்கல் செய்யப்படுகிறது.

இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில்  கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ‘‘குடியுரிமை திருத்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அரசியல் சாசனத்துக்கு மிகவும் விரோதமான ஒரு மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது. இதன் அடுத்த கட்டம், சுப்ரீம் கோர்ட்டு தான். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஆதரவாக தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்கள்’’என கூறி உள்ளார்.
1 More update

Next Story