டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி
x
தினத்தந்தி 14 Dec 2019 3:06 PM GMT (Updated: 2019-12-14T20:36:55+05:30)

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 20 மாணவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களின் விடுதி கட்டணம் கடந்த சில வாரங்களுக்கு முன் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மாமிடாலா ஜெகதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேர்வுகள் எப்படி நடக்கின்றன என காண்பதற்காக நான் சென்றேன்.  நிர்வாக அறைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபொழுது, 15 முதல் 20 மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயற்சித்தனர்.

எனினும், பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் போலீசார் என்னை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர் என கூறியுள்ளார்.

Next Story