குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டுகிறது - அமித்ஷா பேச்சு


குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டுகிறது - அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 14 Dec 2019 6:30 PM GMT (Updated: 14 Dec 2019 5:59 PM GMT)

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் வன்முறையை தூண்டுவதாக, அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கிரிடிஹ்,

ஜார்கண்ட் மாநிலம் கிரிடிஹ் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

“நாங்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது காங்கிரசுக்கு  வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி அந்த சட்டத்துக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுகிறது. அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், சமூக அடையாளம், மொழி, அரசியல் உரிமைகள் ஆகியவை பாதிக்கப்படாது என நான் உறுதி அளிக்கிறேன். நரேந்திர மோடி அரசு அவைகளை பாதுகாக்கும்” என்று அவர் கூறினார்.


Next Story