குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல -தேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர்


குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல -தேசிய சிறுமான்மையினர் ஆணையத் தலைவர்
x
தினத்தந்தி 16 Dec 2019 10:34 AM GMT (Updated: 16 Dec 2019 10:34 AM GMT)

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும் அதனால் போராட தேவையில்லை என்றும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்  அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னை, டெல்லி உள்பட  நாடு முழுவதும்  மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் செய்யது ஹாசன் ரிஸ்வி இந்த சட்டதிருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, “குடியுரிமை திருத்தச் சட்டம்  இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அதனால் அதை எதிர்த்து நாம் போராட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

“நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நிலை ஏற்பட்டால் தேசிய சிறுபான்மை ஆணையம் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்ளும்.  போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் அமைதியான முறையில் கையாள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Next Story