சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது ; சோனியா காந்தி கடும் தாக்கு


சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது ; சோனியா காந்தி கடும் தாக்கு
x

சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி அரசு போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் சூழலில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  

“அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது, நல்ல நிர்வாகத்தை கொடுப்பது அரசியலைமைப்பை காப்பது ஆகியவைதான் ஒரு அரசாங்கத்தின் பணியாகும். ஆனால்,  பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. 

மோடி அரசு நாட்டை வெறுப்பின் படுகுழியில் தள்ளி இளைஞர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக்குகிறது. நாட்டின் நிலையற்றதன்மையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை என்பது தெளிவாக புரிகிறது. மோடி அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

நாட்டில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது, வேலையின்மை எப்போதும் இல்லாதவகையில் உயர்ந்துவிட்டது.  மதங்களுக்கு இடையே பதற்றத்தைப் பரப்பியும், குழப்பத்தை ஏற்படுத்தியும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப மோடி அரசு முயல்கிறது.

மத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை பதிவடு, குடியுரிமை திருத்தச்சட்டம்” ஆகும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story