சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 நாட்களில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை


சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 நாட்களில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Dec 2019 8:13 PM GMT (Updated: 18 Dec 2019 8:13 PM GMT)

சிறுமி கற்பழிப்பு வழக்கில் 17 நாட்களில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையொட்டி தயாரம் மேக்வால் என்ற 21 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த பாலியல் பலாத்கார சம்பவம் கடந்த நவம்பர் 30-ந் தேதி நடந்தது. மறுநாள் தயாரம் மேக்வால் கைது செய்யப்பட்டார். அடுத்த 7 நாட்களில் போலீசார், சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு விசாரணை நாள்தோறும் நடைபெற்றது.

குற்ற சம்பவம் நடந்த 17 நாட்களில் (அதாவது நேற்று முன்தினம்) நீதிபதி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

‘விஞ்ஞானபூர்வ சாட்சியம், சிறுமி வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டது’ என்று போலீசார் தெரிவித்தனர். குற்றவாளியின் தந்தை ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story