கற்பழிப்பு வழக்குகளின் நிலை என்ன? - மாநிலங்கள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கற்பழிப்பு வழக்குகளின் நிலை என்ன? - மாநிலங்கள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2019 9:30 PM GMT (Updated: 18 Dec 2019 9:07 PM GMT)

கற்பழிப்பு வழக்குகளின் நிலை குறித்து, மாநிலங்கள் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்படுவோருக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்ற குரல் சமூகத்தில் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் குற்றவியல் நீதித்துறையில், பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணை நிலை எப்படி உள்ளது? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோரை கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரித்தது.

அப்போது ‘நாட்டில் கற்பழிப்பு சட்டத்தின் விதிகளை முழுமையாக அமல்படுத்துவதற்கான நிலையையும், தகவல்களையும் இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’ என நீதிபதிகள் கூறினர்

மேலும், கற்பழிப்பு வழக்குகளின் விசாரணை நிலவரம், சாட்சியங்கள், தடயவியல் மற்றும் மருத்துவ சான்றுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும், ஐகோர்ட்டுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story
  • chat