தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம் + "||" + "Wanton Acts Of Destruction": India After Vandalism At Gurdwara In Pakistan

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

சீக்கிய மதத்தை தோற்று வித்தவரான  குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக, அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா், அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நாங்கள் வலியுறுத்துகிறோம்.  சீக்கியா்கள் மீது தாக்குதல் நடத்தி, சீக்கிய குருத்வாராவை அவமதித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விஷயத்தில் தலையிட்டு, சீக்கிய யாத்ரீகர்களை தாக்குதல் நடத்தும் கும்பலிடம் இருந்து உடனடியாக மீட்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் டுவிட்டரில் கோரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு: "தலையிட வேண்டாம்" துருக்கி ஜனாதிபதிபதிக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
2. இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.
3. ஹபீஸ் சயீதுக்கு தண்டனை: பாகிஸ்தானின் நடவடிக்கை மீது இந்தியா சந்தேகம்?
ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது
4. இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்
இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லின்கானில் நடந்தது.
5. இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண மேலாண்மை ஆணையம் இலங்கை மந்திரி சிறப்பு பேட்டி
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.