விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர ஆம் ஆத்மி அரசு வேறு எதையும் செய்யவில்லை - அமித்ஷா

தனது பதவிக்காலத்தில் விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர ஆம் ஆத்மி அரசு வேறு எதையும் செய்யவில்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் தலைநகர் டெல்லியில் அமல்படுத்தப்படவில்லை. இதனை பாஜக அரசு கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, “டெல்லி மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர தனது பதவிக்காலத்தில் கெஜ்ரிவால் அரசு வேறு எதையும் செய்யவில்லை.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு டெல்லியில் அமல்படுத்தவில்லை. இதுபோன்ற திட்டங்களால் மத்திய அரசுக்கு டெல்லி மக்களிடம் நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் கெஜ்ரிவால் அரசு செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
Related Tags :
Next Story