டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் சந்தித்தார்.
புதுடெல்லி,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலர். நடத்தை பொருளாதாரத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை தாலரிடம் இருந்து அறிந்து கொண்டதாக பிரதமர் மோடி பின்னர் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் இந்தியா அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் மற்றும் ‘நட்ஜ்’ கோட்பாட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
நடத்தை அறிவியல், அரசியல் கோட்பாடு மற்றும் நடத்தை பொருளாதாரத்தில் நேர்மறையான வலுவூட்டல் மற்றும் மறைமுக ஆலோசனைகளை பரிந்துரைக்கும் கருத்தே ‘நட்ஜ்’ கோட்பாடு ஆகும்.

Related Tags :
Next Story