நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் நிவாரண மனுக்கள் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் நிவாரண மனுக்கள் மீது 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு துணை மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கும்பலால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளி தண்டனை முடித்து விடுதலையானார்.
மீதமுள்ள 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிற 22-ந்தேதி தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் குற்றவாளிகளில் வினய் சர்மா (வயது 26), முகேஷ் குமார் (32) ஆகிய இருவரும் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கேட்டு நிவாரண மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் வருகிற 14-ந்தேதி விசாரிக்கப்படுகிறது. இந்த மனுக்கள் நீதிபதிகளின் அறையிலேயே விசாரிக்கப்படும்.
நிர்பயா குற்றவாளிகளின் கடைசி சட்ட போராட்டம் இதுவாகும். ஆனால் இந்த விவகாரத்தில் மீதமுள்ள 2 குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங் (31), பவன் குப்தா (25) ஆகிய இருவரும் நிவாரண மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story