கொல்கத்தா பேளூர் மடத்தில் பிரதமர் மோடி மரியாதை


கொல்கத்தா பேளூர் மடத்தில் பிரதமர் மோடி மரியாதை
x
தினத்தந்தி 12 Jan 2020 9:56 AM IST (Updated: 12 Jan 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா பேளூர் மடத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார்.

கொல்கத்தா,

கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று விமானம் மூலம் கொல்கத்தா சென்றார். அதன் பின்னர் கொல்கத்தா முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். 

அதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று அங்குள்ள அருங்காட்சியகத்தின் பழங்கால நாணய கட்டிடத்தில் நவீன கலை சிற்பம் ஒன்றை திறந்து வைத்தார்.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவின் ஹவுரா நகரில் உள்ள பேளூர் மடத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். மடத்தில் உள்ளவர்களை சந்தித்து பேசிய மோடி, பின்னர் அங்குள்ள ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

Next Story