தேசிய செய்திகள்

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை + "||" + Armed men loot 25 kg valuables from jewellery shop in Muzaffarnagar

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை
நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 4 பேர் பப்லு சைனியை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த நகைகளை எல்லாம் அள்ளினர். பின்னர் தங்கம், வெள்ளி என சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.


மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த நகரில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜலகண்டாபுரத்தில் நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
ஜலகண்டாபுரத்தில் உள்ள நகைக்கடையில் 8½ கிலோ வெள்ளிப்பொருட்களை 3 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் கொள்ளையன் சுரேஷ் குற்றச்சாட்டு
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் ஒரு கிலோ நகையை போலீசார் எடுத்துக்கொண்டனர் என்று கோர்ட்டு வளாகத்தில் கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தார்.
3. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை
வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரே‌‌ஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. திருச்சி நகைக்கடை கொள்ளை; 3வது நபர் கைது
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய 3வது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.