தேசிய செய்திகள்

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு + "||" + Bhim Army chief Chandrashekhar Azad gets bail in case related to anti-CAA protests

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு

பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது கடந்த டிசம்பர் 20-ம் தேதி போலீசாரின் முன் அனுமதி இல்லாமல் டெல்லி ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் செல்ல, பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அழைப்பு விடுத்தார்.


இதைத் தொடர்ந்து, மக்களை வன்முறைக்குத் தூண்டிய குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து, அவர்  டெல்லி கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  டெல்லி கோர்ட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சில நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 15 பேருக்கு ஏற்கெனவே கடந்த 9-ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.