இரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவி - பிரதமர் மோடி பாராட்டு


இரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவி - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 20 Jan 2020 8:14 PM GMT (Updated: 20 Jan 2020 8:14 PM GMT)

இரவில் படிப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆலோசனை கேட்ட மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

அவுரங்காபாத்,

டெல்லியில் பிரதமர் மோடி நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் அவரிடம் பல்வேறு கேள்விகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டு பயன்பெற்றனர். இதில் மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரேர்னா மன்வார் என்ற மாணவி ஆலோசனை ஒன்றை கேட்டார்.

அதாவது, ‘நான் இரவில் அதிக நேரம் கண் விழித்து படிக்கிறேன். ஆனால் எனது ஆசிரியர்களும், பெற்றோரும் என்னிடம் இரவில் சீக்கிரம் தூங்கிவிட்டு அதிகாலையில் சீக்கிரம் எழுந்து படிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். எனவே இதில் எது சிறந்தது?’ என வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

இது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி என அந்த மாணவியை பாராட்டிய மோடி, இதுபோன்ற கேள்விகள்தான் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் வெற்றி எனவும் குறிப்பிட்டார். எனினும் அந்த மாணவியிடம், ‘எனது பணிச்சுமை காரணமாக இரவில் அதிக நேரம் கண்விழித்து, அதிகாலையில் சீக்கிரம் எழும்புகிறேன். எனவே இந்த கேள்விக்கு பதிலளிக்கும் தார்மீக உரிமை எனக்கு இல்லை’ என அவர் பதிலளித்தார்.


Next Story