ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு


ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 1:57 PM IST (Updated: 1 Feb 2020 1:57 PM IST)
t-max-icont-min-icon

2020-2021 நிதியாண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2020-2021 நிதியாண்டில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜம்மு காஷ்மீருக்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதேபோல், ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும்  நிதி அமைச்சர் தெரிவித்தார். 

1 More update

Next Story