காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி சாவு
காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரிகளுக்கான வசிப்பிடங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு குடிலில் அங்கித் பத்ரஜா என்ற அதிகாரி தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த குடிலில் நேற்று திடீரென தீப்பிடித்தது.
இதில் அவரது மனைவியும், அவர்கள் வளர்த்து வந்த 2 நாய்களும் சிக்கிக்கொண்டார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவ அதிகாரி தனது மனைவியையும், ஒரு நாயையும் முதலில் காப்பாற்றினார். பின்னர் மற்றொரு நாயை காப்பாற்ற முயன்றபோது அவரும் தீயில் சிக்கிக்கொண்டார்.
இதில் அவரது உடல் முழுவதும் 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தீ விபத்துக்கான கரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ராணுவத்தினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story