பஞ்சாபில் சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்


பஞ்சாபில் சிவசேனா தலைவர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
x
தினத்தந்தி 9 March 2020 9:22 PM GMT (Updated: 2020-03-10T02:52:58+05:30)

பஞ்சாபில் சிவசேனா தலைவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

லூதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே காண்ணா பகுதியை சேர்ந்தவர் காஷ்மீர் கிரி. சிவசேனா தலைவராக உள்ள இவர், அங்குள்ள கோவிலில் சாமியாராகவும் உள்ளார். கோவிலின் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், காஷ்மீர் கிரியை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். அந்த சமயத்தில் காஷ்மீர் கிரி பூஜை பொருட்கள் எடுத்து வர வீட்டிற்குள் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கோவில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

Next Story