பொருளாதாரம், கொரோனா: பிரதமர் தூக்கத்தில் வாகனம் ஓட்டுகிறார்; விபத்தை சந்திக்க உள்ளோம் ராகுல் காந்தி கருத்து


பொருளாதாரம், கொரோனா:  பிரதமர் தூக்கத்தில் வாகனம் ஓட்டுகிறார்; விபத்தை சந்திக்க உள்ளோம்   ராகுல் காந்தி கருத்து
x
தினத்தந்தி 12 March 2020 11:45 PM GMT (Updated: 2020-03-13T04:08:05+05:30)

பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான தயார்நிலை இல்லை. இதனை உணராமல் இந்திய அரசு தூங்குகிறது. கொரோனா இந்தியாவில் பரவி வருகிறது. இது பேரழிவை ஏற்படுத்தும். நமது பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.

பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பொருளாதாரம் பற்றியும், அது எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் எந்த புரிதலும் இல்லை. ஏற்கனவே பங்கு சந்தையில் சூழ்நிலை மாறிவிட்டது. இந்த தேசமும், நாமும் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story