கொரோனா பெரிய பிரச்சினை; இந்திய பொருளாதாரம் அழியும் -ராகுல் காந்தி


கொரோனா பெரிய பிரச்சினை; இந்திய பொருளாதாரம் அழியும் -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 13 March 2020 6:10 AM GMT (Updated: 13 March 2020 6:10 AM GMT)

கொரோனா பெரிய பிரச்சினை இந்தியப் பொருளாதாரம் அழியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

பெங்களூருவில் பணிபுரியும் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் யுகானிலிருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்ற 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 36 வெளிநாட்டினர் உள்பட 112 பேருக்கும் டெல்லியின் சாவ்லாவில் உள்ள தடுப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பெரிய பிரச்சினை இந்திய பொருளாதாரம் அழியும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.

அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

இதை நான் தொடர்ந்து கூறுவேன்.

மக்களுக்கும், நாட்டுப்பொருளாதாரத்துக்கும் கொரோனா மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கிறது. பிரச்சினையைத் தவிர்ப்பது தீர்வு கிடையாது. இல்லையெனில் இந்திய பொருளாதாரம் அழியும் என்று கூறி உள்ளார்.


Next Story