மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை,
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மராட்டியத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று அவுரங்காபாத்தை சோ்ந்த 59 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ரஷியா மற்றும் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்று வந்தவர் ஆவார். கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுக்கு அவுரங்காபாத்தில் உள்ள தூத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மராட்டியத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story