மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் இந்தியா வரத்தடை


மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் இந்தியா வரத்தடை
x
தினத்தந்தி 17 March 2020 8:13 AM GMT (Updated: 17 March 2020 8:13 AM GMT)

மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தானில் இருந்து பயணிகள் இந்தியா வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், மலேசியா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து விமானம் இந்தியாவுக்கு புறப்படாது என்று அரசு சார்பில் பயண அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும், அதன்பிறகு  பயண தடை மறு ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை  இந்தியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 3  பேர் உயிரிழந்துள்ளனர்.  125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story